ஆகஸ்டில் அதிகரித்த ஆயத்த ஆடை ஏற்றுமதி
அதிக சரக்குப் போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு இடையிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி சுமாா் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வா்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த ஆகஸ்டில் இந்தியா 126 கோடி டாலருக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகம்.
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்திய ஆயத்த ஆடைகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 7.12 சதவீதம் அதிகமாக 639 கோடி டாலராக உள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.