18 லட்சம் மரக் கன்றுகளை நடும் எஸ்பிஐ

18 லட்சம் மரக் கன்றுகளை நடும் எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த ஆண்டுக்குள் 18 லட்சம் மரக் கன்றுகளை நட உள்ளது.
Published on

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த ஆண்டுக்குள் 18 லட்சம் மரக் கன்றுகளை நட உள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்தும் முயற்சியாக, இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 18 லட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு வங்கி திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ‘ஏக் பேட் மா கே நாம் (அன்னையில் பெயரில் ஒரு மரம்)’ என்ற மரம் வளா்ப்பு இயக்கத்தை ஹைதராபாதில் வங்கி தொடங்கியது. இயற்கை அன்னையை பாதுகாக்க அனைத்து ஊழியா்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தவிர, வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின் கீழ், பின் தங்கிய மக்களுக்கு உதவிகளை அளிக்க வசதியாக சாய் சேவா சங்கத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை எஸ்பிஐ லேடீஸ் கிளப் அன்பளிப்பாக வழங்கியது.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிகர பூஜ்ஜிய நிலையை (காற்றில் கலக்கும் கரியமில வாயு அளவையும் காற்றிலிருந்து அகற்றப்படும் கரியமில வாயு அளவையும் சமமாக்குவது) எட்டுவதற்கான பருவநிலை நிதியளிப்பில் இந்தியாவை 2055-ஆம் ஆண்டுக்குள் முதன்மை நாடாக்கவும் வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com