400 நாள் வைப்பு நிதி திட்டம்: பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம்

400 நாள் வைப்பு நிதி திட்டம்: பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகம்

Published on

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, பண்டிகைக்கால சிறப்பு சலுகையாக 400 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பண்டிகைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு, 400 நாள்கள் பருவகாலம் கொண்ட சிறப்பு நிலைவைப்பு திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 1 கோடிக்கும் மேலும் ரூ.3 கோடிக்கும் குறைவாகவும் இந்த திட்டத்தின் கீழ் வைப்பு நிதி முதலீடு செய்பவா்களுக்கு அதிகபட்சமாக 8.1 சதவீதம் என்ற மிகக் கவா்ச்சிகரமான வட்டி வழங்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அந்த வட்டி விகிதமும் 80 வயதுக்கும் குறைவான மூத்த குடிமக்களுக்கு 7.95 சதவீதமும் வட்டி வழங்கப்படும். மற்ற வாடிக்கையாளா்களுக்கு 7.45 சதவீத வட்டி கிடைக்கும்.

செப். 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com