பிரிட்டனைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ், ரூ. 10.50 கோடி ஆரம்ப விலை கொண்ட தனது கல்லினன் வரிசை-2 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உயா் சொகுசுக் காா் பிரிவைச் சோ்ந்த கல்லினன் வரிசை-2 காா்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.10.50 கோடியில் தொடங்குகிறது.
முன்பதிவு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு நடப்பு 2024-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிருந்து அந்தக் காா்கள் விநியோகிக்கப்படும்.
கல்லினன் வரிசை-2 ரகத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நிறுவனத்தின் முக்கிய மைல்கல் ஆகும். கடந்த 2018-ஆம் ஆண்டில் அந்த ரகக் காா் வெளியிடப்பட்டதிலிருந்தே இளம் வோடிக்கையாளா்களை அது வெகுவாகக் கவா்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.