ஏப்ரலில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்கள்! எதை வாங்கலாம்?!

புதிய வெளியீடாக ஏப்ரல் மாதம் வரவுள்ள ஸ்மார்ட்போன்கள் பற்றி.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன்
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன்Motorola India
Published on
Updated on
3 min read

ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு இந்த ஏப்ரல் மாதம் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் மட்டுமே பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களின் புதிய மாடல்களை வெளியிடவுள்ளனர்.

புதிய தொழில்நுட்ப வசதிகளுடனும் பல்வேறு சிறப்பம்சங்களுடனும் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. இதில் மோட்டோரோலா, விவோ, ஐகியூ, போக்கோ ஸ்மார்ட்போன்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன் (Motorola Edge 60 Fusion)

இந்த ஸ்மார்ட்போன் 1.5 K தெளிவுத் திறனுடன் 6.7 இன்ச் அளவிலான வளைந்த அமோல்ட் டிஸ்ப்ளே (Curved AMOLED Display) 7i கொரில்லா கிளாஸ் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விடியோ, படங்கள் பார்ப்பதற்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

மீடியாடெக் டைமென்சிட்டி 7400 (Mediatek Dimensity 7400) இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகின்றது.

பின்பக்க முதன்மை கேமரா சோனி 50 மெகாபிக்ஸல் (MP) LYT 700 திறனிலும், இரண்டாவது கேமரா 13 மெகாபிக்ஸல் அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்பக்க கேமரா 32 மெகாபிக்ஸல் ஆகும்.

5,500 mAh பேட்டரி திறனுடன் ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளத்துடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 ஆண்டுகள் இயங்குதள அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன் ஸ்ன்மார்ட்போன் இரண்டு வகைகளில் வெளியாகிறது. இதில், 8 GB RAM + 256 GB சேமிப்புத் திறன் கொண்ட மாடல் ரூ. 22,999 என்றும் 12 GB RAM + 256 GB சேமிப்புத் திறன் கொண்ட மாடல் ரூ. 24,599 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2 அன்று வெளியான இந்த ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 9 முதல் ஆன்லைன் சந்தைகள் மற்றும் மோட்டோரோலா ஷோரூம்களில் கிடைக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன் (Motorola Edge 60 Fusion)
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூசன் (Motorola Edge 60 Fusion)

போக்கோ எஃப் 7 அல்ட்ரா (Poco F7 Ultra)

போக்கொ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் உலகம் முழுக்க இந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.67 இன்ச் அளவுள்ள 2k 12 - பிட் தெளிவுத்திறனுடன் அமோல்ட் டிஸ்ப்ளே அமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite Processor) இயங்குதளத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IP68 வாட்டர்ப்ரூஃப் ரேட்டிங் உள்ளதால் நீரில் 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாங்கும் திறன் மற்றும் தூசு பாதுகாப்புத் திறனும் கொண்டுள்ளது.

பின்பக்கத்தில் 3 கேமராக்கள் 50, 32, 50 மெகாபிக்ஸல் வகைமைகளில் கொடுக்கப்பட்ட நிலையில், முன்பக்கம் 32 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

5,600 mAh பேட்டரி திறனுடன் 12 GB RAM + 256 GB சேமிப்புத் திறனுடன் இந்த ஸ்மார்போன் வெளியாகவுள்ளது.

இதன் விலை ரூ. 54,990 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

போக்கோ எஃப் 7 அல்ட்ரா (Poco F7 Ultra)
போக்கோ எஃப் 7 அல்ட்ரா (Poco F7 Ultra)

விவோ டி4 5ஜி (Vivo T4 5G)

விவோ நிறுவனம் முன்பு வெளியிட்ட விவோ டி3 5ஜி (Vivo T3 5G) மாடலின் தொடர்ச்சியாக இந்த ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது.

இது, 6.67 இன்ச் முழு ஹெச்டி + வளைந்த எல்இடி அமோல்ட் டிஸ்ப்ளே (Full HD + LED Quad curved display) உடன் வெளியாகவுள்ளது.

ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 (Snapdragon 7s Gen 3) இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளத்துடன் 5000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

8 GB RAM + 128 GB, 12 GB RAM + 256 GB சேமிப்புத் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா 64 + 8 + 2 மெகாபிக்ஸல் அளவுடனும், முன்பக்க கேமரா 16 மெகாபிஸல் அளவுடனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 24,990 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்றும் ஏப்ரல் கடைசி வாரம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவோ டி4 5ஜி (Vivo T4 5G)
விவோ டி4 5ஜி (Vivo T4 5G)

போக்கோ சி71 (Poco C71)


போக்கோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் குறைந்த விலையில் வெளியாகவுள்ளது.

6.88 இன்ச் அளவுள்ள ஹெச்டி (HD) தெளிவுத்திறன் கொண்ட டிஸ்ப்ளே அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி7250 (Unisoc T7250 ) இயங்குதளத்துடன் வெளியாகிறது.

பின்பக்கத்தில் 2 கேமராக்கள் 32, 8 மெகாபிக்ஸல் வகைமைகளில் கொடுக்கப்பட்ட நிலையில், முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

5,200 mAh பேட்டரி திறனுடன் 4 GB RAM + 64 GB, 6 GB RAM + 128 GB சேமிப்புத் திறன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஏப்ரல் 4 அன்று வெளியான போக்கோ சி71 ஸ்மார்ட்போன், ஏப்ரல் 8 முதல் ஆன்லைனில் விற்பனையைத் தொடங்கியது.

போக்கோ சி71 (Poco C71)
போக்கோ சி71 (Poco C71)

ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)

அதிக பேட்டரி திறன் கொண்ட மாடல் என்பதால் ஐக்யூ நிறுவனத்திடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 8 GB RAM + 128 GB, 12 GB RAM + 256 GB சேமிப்புத் திறன்களுடன் வெளியாகவுள்ளது.

6.77 இன்ச் அளவுள்ள வளைந்த அமோல்ட் டிஸ்ப்ளே (Quad curved AMOLED display) அமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 (Snapdragon 7s Gen 3) இயங்குதளத்துடன் உள்ளது.

பின்பக்கத்தில் உள்ள 2 கேமராக்கள் 50 + 2 மெகாபிக்ஸல், முன்பக்கம் 32 மெகாபிக்ஸல் வகைமைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி திறன் 7,300 mAh ஆகும்.

ஏப். 11 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 21,500 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)
ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)dinmani online

இதுமட்டுமின்றி விவோ வி50இ (Vivo V50e), சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge), ரியல்மி நர்ஸோ 80 ப்ரோ, நர்ஸோ 80எக்ஸ் (Realme Narzo 80 PRO & 80X) ஆகிய மாடல்களும் இந்த மாதம் வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com