
நிலையான மாதாந்திர வருமானத்தைப் பெற சில குறிப்பிட்ட முதலீடுகளை பொருளாதார வல்லுநர்கள் பரிசீலிக்கின்றனர்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS)
இது ஓர் அரசு ஆதரவு சேமிப்புத் திட்டமாகும். இது மிகவும் பாதுகாப்பான மற்றும் குறைந்த ஆபத்துள்ள (Low-risk) முதலீட்டு விருப்பமாகும். இது, இந்திய அரசின் ஆதரவுடன், உறுதியான மாதாந்திர வருமானத்தை வழங்குகிறது. சந்தை நிலையற்ற தன்மை இல்லாமல் நிலையான வருவாயைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
நிலையான மாத வருமானம், முதலீட்டாளரின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த முதலீட்டில், ஆண்டு வட்டி விகிதம் 7.4 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இந்த முதலீட்டில், ஒற்றைக் கணக்கில் அதிகபட்ச முதலீடு ரூ. 9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கில் ரூ. 15 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர வருமான பரஸ்பர நிதிகள் (MIPs)
இந்தவகை முதலீடுகளில், முதலீட்டாளர்களின் நிதியில் ஒரு பகுதியை ஈக்விட்டி பங்குகளிலும், மீதமுள்ள பகுதியை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. இதில், மாதாந்திர வருமானம் என்பது சந்தை சார்ந்த மற்றும் நிதி செயல்திறனைப் பொறுத்து மாறுபடும்.
நிலையான வைப்புத்தொகை (FDs)
நிலையான வைப்புத்தொகையில் நிலையான மற்றும் கணிக்கக்கூடியவகையில் வருவாயை வழங்குகின்றன. மேலும், இதனை சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, குறைந்த ஆபத்தைக் கொண்டதாகத் தெரிகிறது. இவை எம்ஐபி போல அதிக வருவாயைக் கொடுக்காவிட்டாலும், மூலதனப் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வட்டியில் நம்பகத்தை அளிப்பதாய் இருக்கிறது. இந்தவகை முதலீடுகளில் வட்டி விகிதங்கள், வங்கி அல்லது நிதி நிறுவனங்களைப் பொறுத்து ஆண்டுக்கு 6 முதல் 8.5 சதவிகிதம்வரையில் இருக்கும். முதலீடு காலம் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள்வரையில் இருக்கலாம்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வருடாந்திரத் திட்டங்கள்
ஓய்வூதியத்துக்காக வடிவமைக்கப்பட்டதாக இந்த வருடாந்திரத் திட்டங்கள் இருக்கின்றன. இந்தத் திட்டங்களில் மாதந்தோறும், காலாண்டு (3 மாதங்களுக்கு ஒருமுறை), அரையாண்டு (6 மாதங்களுக்கு ஒருமுறை), ஆண்டுதோறும் என்ற முறைகளில் விருப்பத்துக்கேற்ப முதலீடு செய்யலாம். இது, நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.