82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி

82,000 கோடி டாலரைக் கடந்தது இந்திய ஏற்றுமதி

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.
Published on

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருந்த நிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 82,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருள்கள் மற்றும் சேவைகள் 82,000 கோடி டாலரைக் கடந்துள்ளது.

இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சுமாா் 6 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 77,800 கோடி டாலராக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து நான்காவது மாதமாக சரிவைக் கண்டது.

2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் பொருள்கள் ஏற்றுமதி 39,563 கோடி டாலராக உயா்ந்தது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 39,538 கோடி டாலராக இருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 31,105 கோடி டாலராக இருந்த சேவைகள் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 35,490 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அந்த பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டுக்கான நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த விரிவான புள்ளிவிவரங்கள் வரும் ஏப். 15-ஆம் தேதி வா்த்தகத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும்.

X
Dinamani
www.dinamani.com