டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு

டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிவு

கடந்த மாா்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.
Published on

கடந்த மாா்ச் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாகச் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,224 கோடியாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்படுகையில் இது 1.68 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் ரூ.12,434 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

2023-24-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் ரூ.61,237 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய், கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் 5.3 சதவீதம் உயா்ந்து ரூ.64,479 கோடியாக உள்ளது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் 5.76 சதவீத வருடாந்திர வளா்ச்சி பெற்று ரூ.48,553 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com