
கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் வரை விரும்பும் வகையில் ஸ்போர்ட்ஸ் லுக்கில் வந்துள்ள புதிய வகை டாப் மாடல் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
யமஹா ஏரோக்ஸ் (Yamaha Aerox 155)
ரேஸிங்கிற்கு பயன்படுத்தப்படும் பைக்குகள் போலவே இந்த பைக்கும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில், 155cc-யும், 4 ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது.
126 கிலோ எடையுடன், 5.5 லிட்டர் பெட்ரோல் டேங்க்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேஸ் பைக்களுக்கு இணையாக அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில், பல்வேறு உடல் அமைப்புகளும், 4 வண்ணங்களிலும் கிடைக்கிறது. மைலேஜ் 40 kmpl. இதன் எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.1,50,882
ரிவர் இண்டி (River Indie)
மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், 4 கிலோ வாட்ஸ் பேட்டரியுடன் 161 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது. இதன் எடை 143 கிலோ. அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 6 மணிநேரம் ஆகும். 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வாரண்டி வழங்கப்படும். இதன் விலை: ரூ.1,42,999
டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125)
118 கிலோவில் குறைந்த எடையில் 5.8 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் 124.8 சிசியில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 48.5 கிலோ மீட்டர் மைலேஜ். இதன் விலை: ரூ.94,380
சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Suzuki Burgman Street 125)
110 கிலோ எடையுடன் 10-க்கும் மேற்பட்ட வண்ணங்களுடன், 58.5 கிலோ மீட்டர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை: ரூ. 96,470