
புதுதில்லி: நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 19.11 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக சமையல் எண்ணெய் தொழில்துறை அமைப்பான எஸ்.இ.ஏ. தெரிவித்துள்ளது.
தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 2024 மற்றும் மார்ச் 2025 காலகட்டத்தில் நாடு 19,11,420 டன் சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்தது. 2023-24 சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலத்தில் இது 8,82,943 டன்னாக இருந்தது.
சோயாபீன் பொறுத்தவரை இந்தியா முக்கியமாக அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. அர்ஜென்டினாவிலிருந்து இறக்குமதியானது 4,50,602 டன்னிலிருந்து 12,16,291 டன்னாக உயர்ந்துள்ளது.
பிரேசிலிலிருந்து சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதி 3,29,843 டன்னிலிருந்து 3,27,936 டன்னாக குறைந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதியானது 2024 நவம்பர் முதல் 2025 மார்ச் வரை 1,62,347 டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 41,497 டன்னாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 57,65,232 டன்னிலிருந்து 56,39,677 டன்னாக குறைந்துள்ளது. அதே வேளையில், பாமாயில் இறக்குமதி 25,96,304 டன்னிலிருந்து 17,23,721 டன்னாக குறைந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி 13,52,451 டன்னிலிருந்து 13,12,701 டன்னாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 8,86,607 டன்னிலிருந்து 6,62,890 டன்னாக குறைந்துள்ளது.
பயோடீசல் உற்பத்தியை நோக்கி திசைதிருப்பப்படுவதால் பாமாயில் விலை உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய சந்தைகளில் சோயாபீன் எண்ணெயின் அதிகப்படியான உற்பத்தியும் அதன் விலை குறைவுக்கு வழிவகுத்துள்ளது என்றார் எஸ்.இ.ஏ நிர்வாக இயக்குநர் பி.வி.மேத்தா.
நவம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரையான காலகட்டத்தில், இந்தோனேசியா 8,61,362 டன் பாமாயில் மற்றும் 5,70,981 டன் ஆர்.பி.டி பாமாயில் ஏற்றுமதி செய்துள்ளது. மலேசியா 7,31,870 டன் பாமாயில் மற்றும் 82,102 டன் பாமாயில் ஆகியவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 5 மற்றும் 7 சீட்டர் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தும் நிஸ்ஸான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.