
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கானதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
அந்த அனுகூலத்தை வாடிக்கையாளா்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கு வசூலிக்கப்படும் வரும் வட்டி விகிதங்களில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.