
பங்குச்சந்தை இன்று(ஏப். 15) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,852.06 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.55 மணியளவில், சென்செக்ஸ் 1,577.02 புள்ளிகள் அதிகரித்து 76,734.28 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 480.25 புள்ளிகள் உயர்ந்து 23,308.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அனைத்துத் துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் துறை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, பாரதி ஏர்டெல், எல்&டி, எம்&எம் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
மும்பை பங்குச்சந்தையின் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்ந்தன.
அமெரிக்காவின் வரி விதிப்பால் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை வரி விதிப்பு நிறுத்திவைப்பால் தற்போது ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.