தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 ஆகவும், நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 ஆகவும் நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :16 ஏப்ரல் 2025, 6:23 pm IST

மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராக இருப்பதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று சற்று உயர்ந்து முடிந்தது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 24,400 மற்றும் 77,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடந்தது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 ஆகவும், நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 ஆகவும் நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.5 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதமும் உயர்ந்து. ஊடகங்கள், பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்தது முடிந்தது.

சீனாவிற்கான என்விடியா கார்ப்பரேஷனின் சிப் ஏற்றுமதிக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் தொழில்நுட்ப பங்குகள் சரிவுக்கு இது வெகுவாக வழிவகுத்தது.

ஐரோப்பிய குறியீடுகள் இன்று ஏற்ற-இறக்கத்தோடு வர்த்தகமானது. ஆசிய சந்தை கலவையான குறிப்பில் முடிவடைந்தது. தைவான் சரிந்த நிலையில் ஹேங் செங் தலா 2 சதவிகிதம் சரிந்தது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 0.5 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

நிஃப்டியில் மாருதி சுசூகி, ஹிண்டால்கோ, பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்து. இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், டிரென்ட், ஓஎன்ஜிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 122 சதவிகிதம் உயர்ந்ததால், 3 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது. ஒருங்கிணைந்த லாபம் 48 சதவிகிதம் உயர்ந்ததால் ஐஆர்இடிஏ பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 7 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு ஒதுக்கீட்டை குறைத்ததையடுத்து மகாநகர் எரிவாயு பங்குகள் 5 சதவிகிதம் சரிந்து முடிந்தது.

நாராயணா ஹிருதயாலயா, ஈச்சர் மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்டுஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ், அஸ்ட்ராஜெனெகா பார்மா உள்ளிட்ட 80 பங்குகள் 52 வார உயர்வை பதிவு செய்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.6,065.78 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.91 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 65.22 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.