அசத்தும் வசதிகளுடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன்! இந்தியாவில் வெளியீடு எப்போது?

ஹானர் பவர் 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள்.
அசத்தும் வசதிகளுடன் ஹானர் பவர் ஸ்மார்ட்போன்! இந்தியாவில் வெளியீடு எப்போது?
Honor
Published on
Updated on
2 min read

ஹானர் பவர் 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் நேற்று (ஏப். 15) வெளியானது. பல்வேறு அசத்தும் தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஹானர் பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இது 8,000 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன்களில் இதுவே அதிக திறன் கொண்டதாகும்.

மிக வேகமாக சார்ஜ் ஏறும் திறனுடன் 66 வாட்ஸ் வயர் சார்ஜிங் பவர் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3 ஜென் சிலிக்கான் - கார்பன் பேட்டரி (3rd Gen Silicon - carbon battery) மூலம் இயங்குகிறது.

மேஜிக்ஓஎஸ் 9.0 (MagicOS 9.0) ஆண்ட்ராய்ட் 15 இயங்குதளம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அளவில்1.5K அமோல்ட் திரை (6.78-inch 1.5K AMOLED display) உள்ளது.

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Octa-core Snapdragon 7 Gen 3 SoC) ப்ராசஸர் மூலம் இயங்குவதால் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

இதன் இரு பின்பக்க கேமராக்கள் 50 மெகாபிக்சல் அளவைக் கொண்டுள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சாரும் (5-megapixel ultra-wide angle sensor) இதில் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமரா 16 மெகாபிக்சல் அளவுள்ளதால் செல்ஃபி புகைப்படங்களை மிகத் தெளிவாக எடுக்கலாம்.

இதில், ஸ்மார்ட்போன் திரையினுள் கைரேகை சென்சார் (In-display fingerprint sensor) வைக்கப்பட்டுள்ளது.

ஹானர் பவர் 5ஜி ஸ்மார்ட்போன்
ஹானர் பவர் 5ஜி ஸ்மார்ட்போன்

360 கோண நீர் பாதுகாப்பு (360 - degree waterproof build) கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் ஹானர் பவர் ஸ்மார்போனை நீரில் கழுவி, ஊறவைத்தால் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது. மேலும், மழையில் கூட எந்த இடருமின்றி பயன்படுத்தமுடியும்.

அதுமட்டுமின்றி, சி1+ கம்யூனிகேசன் சிப் (C1+ communication chip) பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிக குறைந்த அளவில் நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் கூட நெட்வொர்க் தடைபடாமல் கிடைக்கும்.

இதன் பேட்டரி 6 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்றும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 25 மணி நேரங்கள் வரை விடியோ பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதில் அதிக சேமிப்பு வசதி கொண்ட 12ஜிபி + 512ஜிபி மாடலில் பெய்டோ சேட்டிலைட் வசதி (Beidou's satellite SMS system) உள்ளதால் நெட்வொர்க் இல்லாமலும் செய்திகள் (SMS) அனுப்பலாம்.

என்ன விலை?

இந்த மொபைல் சீனாவில் மட்டுமே தற்போது வெளியாகியிருக்கிறது. இதன், விலை இந்திய மதிப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. 8ஜிபி + 12ஜிபி சேமிப்பு வசதி (8GB RAM + 256GB storage) கொண்ட மாடல் ரூ. 23,000

2. 12ஜிபி + 256ஜிபி சேமிப்பு வசதி (12GB + 256GB storage) கொண்ட மாடல் ரூ. 25,000

3. 12ஜிபி + 512ஜிபி சேமிப்பு வசதி (12GB + 512GB storage) கொண்ட மாடல் ரூ. 30,000

இந்த மாடல்கள் டெசர்ட் கோல்டு, பாண்டம் நைட் பிளாக், ஸ்னோ வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் வெகு விரைவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com