
புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றரை வருட காலத்தில் வெளிச்சந்தையிலிருந்து கூடுதலாக 10.45 கோடி பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நவம்பர் 20, 2023 முதல் ஏப்ரல் 16, 2025 வரை கையகப்படுத்தப்பட்டதன் மூலம், மும்பையை தளமாகக் கொண்ட வங்கியில் எல்.ஐ.சியின் பங்கு 5.03 சதவிகிதத்திலிருந்து 7.05 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
பேங்க் ஆப் பரோடாவின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3.09 சதவிகிதம் உயர்ந்து ரூ.250.20 க்கு வர்த்தகமாகி வருகிறது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.