எத்தனால் கலந்த பெட்ரோலுடன் இயங்கும் எம்.ஜி. ஹெக்டார்..!

புதிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டார் காரை அறிமுகம் செய்துள்ளது.
எம்.ஜி. ஹெக்டார்
எம்.ஜி. ஹெக்டார்
Published on
Updated on
1 min read

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டார் காரை அறிமுகம் செய்துள்ளது. எம்.ஜி.ஹெக்டார், எம்.ஜி.ஹெக்டார் பிளஸ் ஆகிய இரண்டும் நடுத்தர எஸ்யூவி கார்கள் ஆகும்.

தோற்றத்தில் பழைய வடிவம் என்றாலும், மேம்படுத்தப்பட்ட புதிய மாடலில் இரண்டு என்ஜின் வாய்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக 20 சதவிகித எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வகையில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1, 2025-க்குப் பிறகு தயாரிக்கப்படும் வாகனங்களில் இந்த அமைப்பைக் கொண்டு வந்துள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் உள்ளன. இதில் 6 வேரியண்ட்களுடன், லெவல் 2 அடாஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகளும் உள்ளன.

எம்ஜி ஹெக்டார் (பெட்ரோல்) ஷோரூம் விலை ரூ.13,99,800 முதல் ரூ.22,13,800 வரையும், எம்ஜி ஹெக்டார் (டீசல்) விலை ரூ. 18,57,800 முதல் ரூ,22,56,800 வரை உள்ளது.

இது எல்இடி ஹெட்லைட்களுடன் முன்பக்கத்தில் கிரில்லுடன் பார்ப்பதற்கு பெரிய அளவிலும் கம்பீரமாகவும் வடிமைக்கப்பட்டுள்ளது. இது 18 இன்ச் இரட்டை அலாய் வீல்களும், பின்புறத்தில் எல்இடி டெயில்லைட்கள் அகலம் முழுவதும் நேர்த்தியாக வெள்ளி டிரிம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்

14 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, சப் வூஃபர் கொண்ட 8-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப், 8-வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, பின்புற ஏசி வசதி, காலநிலைக்கு ஏற்றவாறு தானியங்கி ஏசி கட்டுப்பாடு அமைப்பு மற்றும் போன்ற தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்(ESC), டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், சைல்ட் சீட் மவுண்ட்கள், லெவல்-2 அட்வான்ஸ்டு ஓட்டுநர் அசிஸ்ட் சிஸ்டம்ஸ்(ADAS) ஆகியவை அடங்கும்.

ஹெக்டரின் நீடித்த புகழ் அதன் சிறந்த தரம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் எம்ஜி மோட்டாரின் இந்திய விற்பனைத் தலைவர் ராகேஷ் சென் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com