

எல்ஐசிபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,360 கோடியாக உள்ளது.
முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,300 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,784 கோடியிலிருந்து ரூ.7,233 கோடியாக உயா்ந்துள்ளது.ஓராண்டுக்கு முன்னா் 3.29 சதவீதமாக இருந்த நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த ஜூன் இறுதியில் 2.62 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நிகர வாராக் கடன் விகிதம் 1.68 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.