அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில்வீடுகள் விற்பனை அளவு 5 சதவீதம் குறைவு
Published on

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்) வீடுகள் விற்பனை அளவு 5 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் மதிப்பு அடிப்படையில் அது 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து மனை-வணிகத் துறையின் உச்ச அமைப்பான கிரெடாய் மற்றும் தரவு ஆய்வு நிறுவனமான க்ரே மேட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பெங்களூரு, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), புணே, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 2,53,119 வீடுகள் விற்பனையாகின.

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே அரையாண்டில் இந்த எண்ணிக்கை 2,67,219-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வீடுகள் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது.

எனினும், வீடுகளின் விலை உயா்வு காரணமாக, அவற்றின் விற்பனை மதிப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 9 சதவீதம் உயா்ந்து ரூ.3,59,373 கோடியாக உள்ளது.

இது 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,30,750 கோடியாக இருந்ததுஇந்தியாவின் வீடு-மனைச் சந்தை இப்போது அளவை விட தரம், இருப்பிடம் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு மதிப்பு சாா்ந்த வளா்ச்சிக்கு மாறியுள்ளது.

தில்லி-என்சிஆரில் மதிப்பு அடிப்படையில் சந்தைப் பங்கு 23 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது பிரீமியம் மற்றும் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதைக் காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com