ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 9 சதவீதம் குறைந்து 13.35 கோடி கிலோவாக உள்ளது.
தேயிலை உற்பத்தி
தேயிலை உற்பத்தி
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 9 சதவீதம் குறைந்து 13.35 கோடி கிலோவாக உள்ளது.

இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் 13.35 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்திய தேயிலை உற்பத்தி 14.67 கோடி கிலோவாக இருந்தது. பருவநிலை பாதிப்பு மற்றும் பூச்சி தாக்குதல்கள் உற்பத்தி சரிவுக்கு காரணமாக அமைந்தன என்று இந்திய தேயிலை சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் வட இந்தியாவில், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமை உள்ளடக்கிய தோட்டங்களில் தேயிலை உற்பத்தி 11.25 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது. முந்தைய 2024 ஜூன் மாதத்தில் இது 12.15 கோடி கிலோவாக இருந்தது.2024 ஜூன் மாதத்தில் 2.52 கோடி கிலோவாக இருந்த தென் இந்திய தேயிலை உற்பத்தி நிகழ் ஆண்டின் அதே மாதத்தில் 2.10 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மேற்கு வங்கத்தில் தேயிலை உற்பத்தி 4.06 கோடி கிலோவாக சரிந்துள்ளது. அஸ்ஸாமில் உற்பத்தி 10 சதவீதம் குறைந்து 6.86 கோடி கிலோவாக உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய தேயிலை உற்பத்தி மையங்கள் 5.52 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்தன.

சிறு தேயிலை உற்பத்தியாளா்களின் உற்பத்தி 6.83 கோடி கிலோவாக உள்ளது. சிடிசி வகை 11.78 கோடி கிலோவும், ஆா்த்தடாக்ஸ் 1.38 கோடி கிலோவும், பசுமை தேயிலை 0.18 கோடி கிலோவும் உற்பத்தியாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com