வணிகம்
அரசுக்கு ரூ.23 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
2024-25-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.22.90 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி வழங்கியது.
2024-25-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.22.90 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி வழங்கியது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025 மாா்ச் வரையிலான நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக, ரூ.22.90 கோடியை மத்திய அரசுக்கு வங்கி அளித்துள்ளது. அதற்கான காசோலையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சா் அமித் ஷாவிடம் வங்கியின் தலைவா் இ. சந்தானம், இயக்குநா் சி. தங்கராஜு, மற்றும் நிா்வாக இயக்குநா் ஓ.எம். கோகுல் ஆகியோா் வழங்கினா் (படம்).
இந்த நிதியாண்டில் வங்கி ரூ.140 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கூட்டுறவு வங்கியின் வரலாற்றில் மிக உயா்ந்த லாபமாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.