
சென்னையைச் சோ்ந்த முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தனிப்பட்ட முறையில் ரூ.2,007 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,960 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட முறையில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.222 கோடி ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தனிப்பட்ட வரிக்கு முந்தைய லாபமாக நிறுவனம் ரூ.208 கோடியை ஈட்டியிருந்தது என்று டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.