வணிகம்
வீல்ஸ் இந்தியா நிகர லாபம் ரூ.26 கோடியாக அதிகரிப்பு
வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.26.44 கோடியாக அதிகரித்துள்ளது.
வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.26.44 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூன் 30-ஆம் தேதி நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 26.44 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25.37 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,088 கோடியில் இருந்து ரூ.1,187 கோடியாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் இருந்து ஏற்றுமதி வருவாய் ரூ.259 கோடியில் இருந்து ரூ.324 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.