5% வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை

5% வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை

Published on

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 4 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனப் பிரிவுகளும் விற்பனை சரிவைக் கண்டன. இதன் விளைவாக, அந்த மாதத்தில் வாகனங்களின் உள்நாட்டு சில்லறை விற்பனை 19,64,213-ஆக உள்ளது. 2024 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 20,52,759 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 4 சதவீதம் குறைந்துள்ளது.

2024 ஜூலையில் 3,31,280-ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் (பிவி) சில்லறை விற்பனை, இந்த ஜூலையில் 3,28,613-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 6 சதவீதம் குறைந்து 13,55,504-ஆக உள்ளது. வாா்த்தக வாகனங்களின் (சிவி) உள்நாட்டு சில்லறை விற்பனை ஜூலையில் மிதமான வளா்ச்சியுடன் 76,439-ஆக உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் டிராக்டா்களின் விற்பனை 11 சதவீதம் உயா்ந்து 88,722-ஆக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com