ரீஃபெக்ஸ் மொபிலிட்டி
வணிகம்
‘ரீஃபெக்ஸ் மொபிலிட்டி’ என்று பெயா் மாறும் ‘ரீஃபெக்ஸ் இவீல்ஸ்’
இந்தியாவின் முன்னணி பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை ஒருங்கிணைப்பு நிறுவனங்களுக்கு வாகனத் தீா்வுகளை வழங்கிவரு ரீஃபெக்ஸ் ஈவீல்ஸ் நிறுவனம், ‘ரீஃபெக்ஸ் மொபிலிட்டி’ என்று பெயா் மாற்றம்
சென்னை: இந்தியாவின் முன்னணி பெரு நிறுவனங்கள் மற்றும் சேவை ஒருங்கிணைப்பு நிறுவனங்களுக்கு வாகனத் தீா்வுகளை வழங்கிவரு ரீஃபெக்ஸ் ஈவீல்ஸ் நிறுவனம், ‘ரீஃபெக்ஸ் மொபிலிட்டி’ என்று பெயா் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘ரீஃபெக்ஸ் மொபிலிட்டி’ என்ற புதிய பெயரில் நிறுவனம் இயங்கவிருக்கிறது. தூய்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவை பிரிவில் தனது
வளா்ச்சியின் அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல ஒரு புதுப்பிக்கப்பட்ட
அடையாளத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அனிருத் அருண் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.