ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் சொகுசான 5-சீட்டர்: சிட்ரன் “சி3எக்ஸ்” அறிமுகம்!

சிட்ரன் “சி3எக்ஸ்” பற்றிச் சுருக்கமாக...
ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் சொகுசான 5-சீட்டர்: சிட்ரன் “சி3எக்ஸ்” அறிமுகம்!
படம் | சிட்ரன் பதிவு
Published on
Updated on
2 min read

சொகுசான பயணத்தை விரும்புவோருக்காகவே தமது தயாரிப்புகளில் சஸ்பென்சன் தரத்துக்கு அதிக முக்கியத்துவ அளிக்கும் சிட்ரன் நிறுவனத்தால் ரூ. 5 லட்சம் பட்ஜெட்டில் புதிய எஸ்.யூ.வி. ரக கார் “சி3எக்ஸ்” இன்று(ஆக. 12) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிட்ரன் நிறுவன கார்களில் இல்லாத வகையிலான 15 கூடுதல் அம்சங்கள் இந்த கார் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் விற்பனையாகும் எஸ்.யூ.வி. மாடல் கார்களில், பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். சிட்ரன் சி3 மாடலின் மேம்பட்ட ரகமாக வடிவமைக்கப்பட்டுள்ள சி3எக்ஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ. 5.25 லட்சம்.

“சி3எக்ஸ்” காரில் உள்ள தானியங்கி குளிர்சாதன வசதி(ஆட்டோமேடிக் ஏசி) 14 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் குறைந்த வெப்பநிலை வரை குளிரூட்டும் வசதி கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரையில், 6 ஏர் பேக்ஸ் இருப்பதால் காரில் அதிகபட்சமாக செல்லும் 5 பயணிகளுக்கும் மிகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்துள்ளது சிட்ரன் நிறுவனம்.

படம் | சிட்ரன் பதிவு

சஸ்பென்சன்:

சிட்ரன் நிறுவனம் ஒரு காரை வடிவமைக்கிறது என்றவுடன் அதன் சஸ்பென்சன்(அதிர்வுகளை தாங்கும் திறன்) திறனைக் குறித்தே வாடிக்கையாளர்கள் முதலில் வினவுவர். அந்த அளவுக்கு சஸ்பென்சனில் அதிக கவனம் செலுத்தி தமது கார்களை சிட்ரன் வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிய “சி3எக்ஸ்” மாடல் காரில், ‘சிட்ரன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கார்களில் மிகச்சிறந்த சஸ்பென்சன் அமைப்பு’ பொருத்தப்பட்டுள்ளது. இதனை ‘ப்ளையிங் கார்ப்பெட்’ என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது. இதனால் காரில் பயண சொகுசு உயர்தரத்தில் இருக்குமாம்!

என்ஜின் அம்சங்கள்:

  • 82 பிஎச்பி, 115 என்எம் டார்க் ஆற்றலுடன் கூடிய 5-ஸ்பீடு மேனுவல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்(நேச்சுரல் ஆஸ்பிரேடட் வகை)

  • 100 பிஎச்பி, 190 என்எம் டார்க் ஆற்றலுடன் கூடிய 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்

  • அதிகபட்ச மைலேஜ் 19.3 கி.மீ.(ஒரு லிட்டருக்கு)

காரில் அதிவேக திறனைப் பொருத்தவரையில், 10 விநாடிகளில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்ட வல்லமை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத் தோற்றத்தைப் பொருத்தவரையில், ஒரே நிறத்திலான(மோனோடோன் - 5 நிறங்களில் ஏதாவதொன்றை கார் முழுவதும் கொண்டதாக கிடைக்கிறது) டிசைன் கொண்டதாகவும், அல்லது இரண்டு நிறங்களில்(டூயல் டோன் - 2 நிறங்களில்) டிசன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் உள்புறத்தில் 3 வகையான தோற்றப் பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சிட்ரன் “சி3எக்ஸ்” மாடல் விலை ரூ. 9,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது(விலை மாற்றத்துக்கு உட்பட்டது). அடிப்படை மாடல் காரின் விலை ரூ. 5,25,000-லிருந்து ஆரம்பமாகிறது.

காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி செய்ய சிட்ரன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

Summary

Citroen C3X range, new edition of the Citroen C3 is designed to deliver elevated comfort

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com