
ரூ. 80,000 விலை உடைய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை ரூ. 47,120 தள்ளுபடி பெற்று வெறும் ரூ. 32,780க்கு அமேசான் இணைய விற்பனை தளத்தில் வாங்கலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே குறிப்பிடத்தகுந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகவே உள்ளது. அந்தவகையில் தற்போது, அமேசான் இணைய விற்பனை தளத்தில் முன் எப்போதும் இல்லாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை தற்போதும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டு கணிசமான தொகையை சேமித்துக்கொண்டு, குறைந்த விலையில் ஐபோன் 15-ஐ வாங்கலாம்.
அமேசான் தள்ளுபடி
ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 79,900. ஆனால், அமேசான் இணைய விற்பனை தளத்தில் 12% தள்ளுபடியுடன் ரூ. 61,400க்கு விற்கப்படுகிறது. ஆனால், இதில் மேலும் விலைக் குறைப்பை ஆப்பிள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களால் பெறமுடியும்.
இதற்கு முன்பு ஐபோன் 14 ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால், அதனை ரூ. 25,550 வரையிலான தொகைக்கு அமேசானிடமே பரிமாற்றம் செய்துகொள்ளலாம். இதனால், புதிதாக வாங்கும் ஐபோன் 15 விலை ரூ. 35,850ஆக குறையும்.
மேலும், ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டை வைத்திருந்தால், கூடுதலாக ரூ. 3,070 சலுகை பெற்று, வட்டியில்லா தவணை முறையில் எடுத்துக்கொள்ளலாம். இந்த சலுகைகளையெல்லாம் கழித்துவிட்டு ரூ. 32,780 செலுத்தி ஐபோன் 15ஐ பெறலாம். இதன்மூலம் பயனர்களால் ரூ. 47,120 சேமிக்க முடியும்.
இதையும் படிக்க | ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.