2% சார்ஜிங்கில் 75 நிமிடங்கள் பேசலாம்! விரைவில் அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 7சி

அல்ட்ரா பவர் சேவிங் அம்சத்தில் (2% சார்ஜ் இருக்கும்போது கூட) 75 நிமிடங்களுக்கான அழைப்புகளைப் பேச முடியும்.
Honor X7c 5G
ஹானர் எக்ஸ் 7சி படம் / நன்றி - ஹானர்
Published on
Updated on
1 min read

ஹானர் எக்ஸ் 7சி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஸ்நாப்டிராகன் 4 நான்காம் தலைமுறை புரசஸர் உடன் 5,200mAh பேட்டரி திறன் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹானர் நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது புதிதாக ஹானர் எக்ஸ் 7சி என்ற ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஹானர் எக்ஸ் 7சி குறித்த சிறப்பு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஹானர் எக்ஸ் 7சி சிறப்பம்சங்கள்

  • ஹானர் எக்ஸ் 7சி ஸ்மார்ட்போனில் பேட்டரி முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதில், 5200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 35W திறன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம்; 46 தொடர்ந்து அழைப்புகளைப் பேசலாம் என ஹானர் கூறுகிறது.

  • அல்ட்ரா பவர் சேவிங் அம்சத்தில் (2% சார்ஜ் இருக்கும்போது கூட) 75 நிமிடங்களுக்கான அழைப்புகளைப் பேச முடியும் என நம்பிக்கை அளிக்கிறது.

  • குவால்கம் ஸ்நாப்டிராகன் 2ஆம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • 8GB உள் நினைவகத்துடன் 8GB மெய்நிகர் நினைவகம் (virtual RAM) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 16GB உள் நினைவகம் கொண்டது. 256GB நினைவகம் உடையது.

  • பின்புறம் 50MP முதன்மை கேமராவும் பின்புறம் 50MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை சுமுகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

  • நீர் புகாத்தன்மை மற்றும் தூசி படியாதன்மைக்காக IP64 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • இரு ஸ்பீக்கர்கள் உள்ளதால், 300% வரை ஒலியளவை கூட்டிக்கொள்ளலாம்.

  • பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு ரூ.19,500 தள்ளுபடி! எப்படி வாங்குவது?

Summary

Honor X7c 5G is Expected to Debut in India with Snapdragon 4 Gen 2 SoC and 5,200mAh Battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com