
போக்கோ எம் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய ரக ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனத்தின் கிளை நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களைக் கவரும் வகையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
போக்கோவின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த பயனர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.
தற்போது போக்கோவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய போக்கோ எம் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
மூன்று வகையான வேரியன்ட்களில் போக்கோ எம் 7 கிடைக்கிறது.
8GB+128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 13,999,
8GB+256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999
6GB+128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999
தற்போது சந்தையில் அறிமுகமாகியிருந்தாலும், ஆக. 19ஆம் தேதி முதல் இணைய விற்பனை தளங்களில் கிடைக்கும்.
போக்கோ எம் 7 சிறப்பம்சங்கள்
மூன்று வகையான வண்ணங்களில் கிடக்கின்றன. நீலம், கருப்பு, சில்வர் நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.
6.9 அங்குல எச்.டி. திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 288Hz திறன் கொண்டது.
ஸ்நாப்டிராகன் 6எஸ் மூன்றாம் தலைமுறை புராசஸர் கொண்டது.
16GB வரை உள் நினைவகம் (RAM) கொண்டது. இதனால், எந்தவித செயலிகளையும் தரவிறக்கம் செய்து சுமுகமாக பயன்படுத்த முடியும்.
7000mAh பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.