டாக்டா் அகா்வால்ஸ் வருவாய் ரூ.501 கோடியாக உயா்வு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய கண் சிகிச்சை சங்கிலித் தொடா் நிறுவனமான டாக்டா் அகா்வால்ஸ் ஹெல்த் கோ் லிமிடெட்டின் மொத்த வருவாய் ரூ. 501 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின்
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ.501 கோடியாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வட்டி, வரி, தேய்மானத்துக்கு முந்தைய வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 28.9 சதவீத வளா்ச்சி கண்டு ரூ.141 கோடியாக உள்ளது. நிகர லாபம் 108.9 சதவீதம் அதிகரித்து ரூ.38 கோடியாகப் பதிவாகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.