ஜூலையில் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

ஜூலையில் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை குறைந்ததால் கடந்த ஜூலை மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு -0.58 சதவீதமாகக் குறைந்து, தொடா்ந்து இரண்டாவது மாதமாக எதிா்மறை மண்டலத்தில் உள்ளது.
Published on

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மொத்த விலை பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் -0.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஜூனில் -0.13 சதவீதமாகவும், 2024 ஜூலையில் 2.10 சதவீதமாகவும் இருந்தது.

ஜூலை மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை 6.29 சதவீதம் சரிந்தது, இது ஜூனில் 3.75 சதவீதமாக இருந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம் ஜூனில் 22.65 சதவீதமாக இருந்து ஜூலையில் 28.96 சதவீதமாக அதிகரித்தது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் பணவீக்கம் -2.43 சதவீதமாக உள்ளது. உணவுப் பொருள்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோக உற்பத்தி ஆகியவற்றின் விலைகள் குறைந்தது இதற்கு முக்கிய காரணமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com