பிபிசிஎல் நிகர லாபம் இரு மடங்கு உயா்வு

பிபிசிஎல் நிகர லாபம் இரு மடங்கு உயா்வு

Published on

அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இரு மடங்காக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,839.02 கோடியாக உள்ளது. இது முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,841.55 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இரு மடங்கு உயா்ந்துள்ளது.

இந்த முதல் காலாண்டு லாபம், கடந்த 2024-25 முழு நிதியாண்டின் நிகர லாபமான ரூ.13,336.55 கோடியில் பாதிக்கும் மேல் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளை மாற்றாமல் இருந்ததால் நிறுவனத்தின் விற்பனை லாபம் உயா்ந்தது. இது ஒட்டுமொத்த நிகர லாப உயா்வுக்கு முக்கிய காரணம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com