
புதுதில்லி: கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை அறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வருகின்றன.
சாம்சங் அதன் கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்களை உள்ளிட்டவை தயாரித்து வருகிறது.
சாம்சங் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் பட்டியலை தற்போது விரிவுபடுத்தியுள்ளது. அதே வேளையில், பல சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் டி.எம். ரோ, இந்தியாவில் மடிக்கணினிகளை உற்பத்தி செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகப் பகிர்ந்து கொண்டார்.
உலகளவில், சாம்சங் இந்தியா, இரண்டாவது பெரிய கைபேசிகளை உற்பத்தி பிரிவைக் கொண்டுள்ள நிலையில், ஆப்பிளுக்குப் பிறகு கைபேசிகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நிறுவனமாகும்.
சைபர்மீடியா ஆராய்ச்சி அறிக்கையின்படி, டேப்லெட் பிசி பிரிவில் 15 சதவிகித பங்கைக் கொண்ட இரண்டாவது பெரிய நிறுவனமாக சாம்சங் உள்ளது.
இதையும் படிக்க: ஸ்பிக் நிகர லாபம் ரூ.66.71 கோடியாக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.