‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!

ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது.

ஹானர் எக்ஸ் 7 சி - படம் / நன்றி - ஹானர்

Published On :

ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது. எனினும், இதன் விற்பனை ஆக. 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹானர் நிறுவனக் கிளைகளிலும், இணைய விற்பனை தளங்களிலும் ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹானர் நிறுவனம் புதிதாக

ஹானர் எக்ஸ் 7 சி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அலுமினியம் சிலிகேட் உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து முற்றிலும் தரத்தில் மேம்பட்டதாக இருக்கும் என ஹானர் கூறுகிறது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ஹானர் எக்ஸ் 7சி ஸ்மார்ட்போனில் பேட்டரி முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதில், 5200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 35W திறன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 59 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கலாம்; 46 தொடர்ந்து அழைப்புகளைப் பேசலாம் என ஹானர் கூறுகிறது.

  • அல்ட்ரா பவர் சேவிங் அம்சத்தில் (2% சார்ஜ் இருக்கும்போது கூட) 75 நிமிடங்களுக்கான அழைப்புகளைப் பேச முடியும் என நம்பிக்கை அளிக்கிறது.

  • ஸ்நாப்டிராகன் 4 இரண்டாம் தலைமுறை புராசஸர் கொண்டது. மேஜிக் ஓஎஸ் 8.0 என்ற இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது.

  • நீர் புகாத்தன்மை மற்றும் தூசி படியாதன்மைக்காக IP64 திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50M முதன்மை கேமரா கொண்டுள்ளது. 2MP டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 மடங்கு ஜூம் செய்துகொள்ள முடியும். செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 5MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 8GB உள் நினைவகத்துடன் 8GB மெய்நிகர் நினைவகம் (virtual RAM) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 16GB உள் நினைவகம் கொண்டது. 256GB நினைவகம் உடையது.

  • பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

Summary

Honor X7c 5G Launched in India with 5200mAh Battery and 50MP Camera: Check Out Details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.