
புதுதில்லி: வலுவான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் ஆதரவுடன் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவடைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டுக்கு ஆற்றிய உரையில் பரிந்துரைத்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் இந்திய ரூபாய் மதிப்பு நேர்மறையானதாக வர்த்தகமாகுவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூ.87.46 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.87.48 முதல் ரூ.87.48 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36ஆக நிறைவடைந்தது.
கடந்த (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.87.59 ஆக சரிந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அந்நிய செலாவணி மற்றும் பங்குச் சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.