ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 21% உயர்வு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 21% உயர்வு
Published on
Updated on
1 min read

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனம் 4,49,755 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இது 2024 ஜூலை மாதத்தின் மொத்த விற்பனையான 3,70,274 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 3,47,535-லிருந்து 4,12,397-ஆகவும், ஏற்றுமதி 22,739-லிருந்து 37,358-ஆகவும் உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com