தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கர்நாடகத்தில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

கர்நாடகத்தில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக சிங்கரேணி நிலக்கரி தெரிவித்துள்ளது.

Published On :

ஹைதராபாத்: மத்திய சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டும் ஏலத்தின் மூலம் கர்நாடகத்தில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்க நிறுவனமான சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஏலத்தில் 37.75 சதவிகித ராயல்டியை மேற்கோள் காட்டி சிங்கரேணி L-1 ஏலதாரராக உருவெடுத்ததாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால்ராம் தெரிவித்தார்.

தங்கம் மற்றும் செம்பு வைப்புக்கள் அமைந்துள்ள கர்நாடகத்தில் தேவதுர்கா பகுதியில் சிங்கரேணி ஆய்வுப் பிரிவு விரைவில் ஆராய்ச்சியைத் தொடங்கும் என்றார்.

சுரங்க உரிமைகளைப் பெறும் நிறுவனம் - அது சிங்கரேணி அல்லது வேறு நிறுவனமாக இருந்தாலும், கர்நாடக அரசுக்கு ராயல்டி செலுத்த வேண்டும்.

ஆய்வுப் பணிக்கு சுமார் ரூ.90 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், ரூ.20 கோடி மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.