மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4!

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

News image

ரியல்மீ பி 4 ப்ரோ - படம் / நன்றி - ரியல்மீ

Updated On :20 ஆகஸ்ட் 2025, 6:34 pm IST

விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ரியல்மீ பி 4 மற்றும் ரியல்மீ பி 4 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் சிறப்பம்சங்கள், சமீபத்தில் விவோ, ஓப்போ நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

மத்திய தர விலையில், மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கூடுதல் பேட்டரி திறன், மேம்படுத்தப்பட்ட புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.

ரியல்மீ பி 4 மூன்று வேரியன்ட்களில் சந்தைகளில் அறிமுகமாகியுள்ளன.

  • 6GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 18,499

  • 8GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 19,499

  • 8GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. Rs 21,499

இதேபோன்று ரியல்மீ பி 4 ப்ரோவும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கின்றன.

  • 8GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 24,999

  • 8GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. Rs 26,999

  • 12GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ Rs 28,999

இவற்றின் விற்பனை ஆக. 27 நண்பகல் 12 மணி முதல் தொடங்கவுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னன்ன?

ரியல்மீ பி 4 ப்ரோ ஸ்மார்ட்போன், 6.8 அங்குல எச்.டி. திரை கொண்டது. திரை பயன்படுத்த சுமுகமாக இருக்கும் வகையில் 144Hz திறனுடையது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 6500nits திறனும் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்நாப்டிராகன் 7 நான்காம் தலைமுறை புராசாஸர் உடையது.

பின்புறம் 50MP முதன்மை கேமராவுடன் சோனி நிறுவனத்தின் IMX896 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 8MP வைட் ஆங்கிள் கேமராவும், செல்ஃபி பிரியர்களுக்காக 50MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

7000mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ பி 4 ஸ்மார்ட்போனில், 6.77 அங்குல அமோலிட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. திரை சுமுகமாக இருப்பதற்கு 144Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர் கொண்டது.

பின்புறம் 50MP முதன்மை கேமராவும், 8MP அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா உடையது.

Summary

Realme P4 5G Series Launched in India: Price and Specs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.