புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி-யுடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி-யுடன் ஏா் இந்தியா ஒப்பந்தம்

Published on

புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை (எஸ்ஏஎஃப்) வரும் டிசம்பா் மாதம் முதல் பானிபட்டிலுள்ள நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது. ஆண்டுக்கு 35,000 டன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படும். இந்த எரிபொருள், பாரம்பரிய விமான எரிபொருளுடன் 50 சதவீதம் வரை கலக்கலாம்.

இந்த எரிபொருளை வழங்குவதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2027 முதல் சா்வதேச விமானங்களுக்கு 1 சதவீத எஸ்ஏஎஃப் கலப்பு கட்டாயமாகிறது. இந்த ஒப்பந்தம், குறைந்த கரியமில எரிபொருளை ஊக்குவிக்க வழிவகை செய்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com