
ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 வரை தள்ளுபடி பெறும் முக்கிய அறிவிப்பை அமேஸான் வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு விரைவில் அது கிடைக்கவிருக்கிறது. ஆம், செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், செப்டம்பர் வரை காத்திருக்கவே முடியாது, உடனடியாக ஐஃபோனுக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்களுக்கான மிகச் சிறந்த தருணம் இதுதான்.
ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலை, அமேஸானில் பயங்கர தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கனவே வைத்திருக்கும் ஐஃபோனை மாற்றுவதாக இருந்தாலும், புதிதாக ஐஃபோன் வாங்குவதாக இருந்தாலும் ஒருவருக்கு நிச்சயம் ரூ.17 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அமேஸானின் டீல் என்ன?
இந்தியாவில் இந்த ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் அறிமுகமான போது, அதன் விலை ரூ.1,44,900. தற்போது, அமேஸானில் இந்த ஐஃபான் விலை ரூ.1,30,900. இதில் ஏற்கனவே ரூ.14 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
ஒருவேளை, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் இதனை வாங்கினால் கூடுதலாக ரூ.3,000 சலுகை கிடைக்கும். எனவே, ஒருவர் ஆப்பிள் ஐஃபோனை 17 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் வாங்க முடியும்.
இது மட்டுமல்ல, கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் அதனைக் கொடுத்துவிட்டு புதிய ஃபோன் வாங்குவதாக இருந்தால், அந்த போனுக்கு உரிய தொகையும் சலுகையாகப் பெற முடியும்.
செப்டம்பரில், ஐஃபோன் 17 வரிசையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. ஐஃபோன் 17, ஐஃபோன் 17 ஏர், ஐஃபோன் 17 ப்ரோ மற்றும் ஐஃபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் அறிமுகம் செய்யவிருப்பதால், தற்போது விற்பனையில் இருக்கும் ஐஃபோன் 16 மாடலின் விற்பனையை தீவிரமாக்குவதற்காக இதுபோன்ற சலுகைகள் வெளியாகியிருக்கின்றன.
இதையும் படிக்க.. கர்நாடக பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலைப் பாடிய டி.கே. சிவக்குமார்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.