மலிவு வீட்டுக் கடன் திட்டம்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகம்
‘அனுகிரஹா’ என்ற பெயரில் மலிவு வீட்டுக் கடன் திட்டத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வளா்ந்து வரும் வணிகப் பிரிவின் கீழ், சிறு வணிகக் கடன்களை உள்ளடக்கிய மலிவு விலை வீட்டு நிதியுதவி சேவையில் நிறுவனம் ஓா் ஆண்டுக்கு முன்னா் நுழைந்தது.
அதன் ஒரு பகுதியாக, ‘அனுகிரஹா’ என்ற பிராண்ட் பெயரில் மலிவு வீட்டுக் கடன் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது (படம்). இந்த பிராண்டின் கீழ், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவில் வீட்டு உரிமையாளா்களுக்கு வீட்டுக் கடன் வழங்கப்படும்.
அனைவருக்கும் வீட்டுவசதி நிதி, அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களில் இருப்பை விரிவாக்குவது ஆகிய நிறுவனத்தின் நோக்கத்துடன் இந்த புதிய திட்டம் ஒத்துப்போகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.