வந்துவிட்டது 9 காரட் ஹால்மார்க் தங்க நகைகள்! விலையைப் பற்றி கவலை வேண்டாம்!!

9 காரட் ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனைக்கு வருவதால், இனி விலையைப் பற்றி கவலை வேண்டாம் என்கிறார்கள்.
தங்க நகைகள்
தங்க நகைகள்
Published on
Updated on
2 min read

இந்தியாவில் 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், பண்டிகைக் காலம் தொடங்கியிருப்பதால், இந்த நகைகள் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்கிறதே என்று கவலை வேண்டாம், இந்தியாவில், இனி 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கிடைப்பதால் மக்கள் குறைந்த விலையிலும் தங்க நகைகளை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, 9 கேரட் தங்க நகை என்றால், 1000 கிராமில் 375 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம், அதனுடன் செம்பு, வெள்ளி, துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும் என்பது பொருள்.

உதாரணத்துக்கு சுத்தமான அதாவது 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.1 லட்சம் என்றால், 9 காரட் தங்கம் 10 கிராம் ஜிஎஸ்டி உள்பட சுமார் ரூ.38 ஆயிரம் அளவில் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியர்களுக்கு தங்க நகைகள் மீது இருக்கும் ஆர்வம், தங்கத்தின் விலை கடும் உயர்வு போன்றவற்றை ஈடுகட்டும் வகையில், 9 காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.

இதுவரை, 24, 23, 22, 20, 18, 14 காரட் தங்க நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் எனப்படும் பிஐஎஸ் முத்திரை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 9 காரட் தங்க நகைகளும் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்கு வருகிறது.

இதன் முலம், நகரப் பகுதிகளை விட தங்கம் வாங்குவது குறைவாக இருக்கும் கிராமப் பகுதிகளிலும் தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

9 காரட் தங்கம் விலை, 22 காரட் தங்கம் விலையைக் காட்டிலும் மிகவும் குறைவு என்பதால் அதிகமானோர் இதனை வாங்க முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டாலே பண்டிகைகளின் காலம் ஆரம்பம் என்பதால், இனி தங்க நகைக் கடைகளில் 9 காரட் தங்க நகைகளின் விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்திய மக்கள் 800 - 850 டன் தங்கத்தை வாங்குகிறார்கள். இது நகரப் பகுதிகளில் மட்டும் 60 சதவீதம்.

தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், வாங்கும் அளவு குறைகிறது. இதனால், பெரும்பாலான தங்க நகைக் கூடங்கள் இதுவரை 22 காரட் நகைகளை செய்து வந்ததைக் குறைத்துவிட்டு தற்போது 14 முதல் 9 காரட் தங்க நகைகளை செய்வதை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 9 காரட் தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்கு வருவது, அதன் வாங்கும் அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் 9 காரட் தங்கத்தில் எந்த டிசைன்களை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதால், டிசைனர்களுக்கும் மகிழ்ச்சி அதிகரித்திருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிஐஎஸ் முத்திரை

இந்திய மக்களுக்கு தங்க நகைகள் மீதான ஆர்வம் அதிகம் என்பதால், அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 700 டன் முதல் 800 டன் தங்கம் வரை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இது ஆண்டுதோறும் அதிகரித்தும் வருகிறது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு, அணிகலன்களாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தங்கம் தரமானதாக இருக்க வேண்டும். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் தரச்சான்று அளிப்பதற்காக, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.

முக்கியமாக, தரமற்ற தங்க நகைகளை வாங்குவதில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்; தரமான நகைகளை நகைக் கடைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய காரணங்களுக்காக தரச்சான்று அளிக்கப்படுகிறது. இதுவரை 14 காரட், 18 காரட், 22 காரட் ஆகிய மூன்று அளவீடுகளில் தரச்சான்று அளிக்கப்படுகிறது. இனி 9 காரட் நகைகளுக்கும் ஹால்மார்க் தரச்சான்று அளிக்கப்படும்.

Summary

Now, hallmark certification will be given to 9-carat jewelry as well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com