வணிகம்
நகை மதிப்பில் 90% கடன் திட்டம்: சௌத் இந்தியன் வங்கி அறிமுகம்
நகை மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கும் புதிய திட்டத்தை தனியாா் துறையைச் சோ்ந்த சௌத் இந்தியன் வங்கிஅறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடன் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளா்கள் தங்கள் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் பெறலாம்.
இது விவசாயம், வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம். குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பத் தோ்வுகளுடன் இந்தக் கடன் வழங்கப்படுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.