
மும்பை: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் மீண்டும் உயர்ந்து முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை வாங்கியதால் சந்தைகள் உயர வழி வகுத்தது.
காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 492.21 புள்ளிகள் உயர்ந்து 81,799.06 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30-பங்கு சென்செக்ஸ் 329.06 புள்ளிகள் உயர்ந்து 81,635.91 ஆகவும் 50-பங்கு கொண்ட நிஃப்டி 97.65 புள்ளிகள் உயர்ந்து 24,967.75 ஆக நிலைபெற்றது.
துறை ரீதியாக ஐடி குறியீடு 2.3% உயர்ந்தம், ரியால்டி குறியீடு 0.7% அதிகரித்ததும், உலோக குறியீடு 0.6% உயர்ந்தது முடிந்தன.
நிஃப்டி-யில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் அப்போலோ மருத்துவமனைகள், நெஸ்லே இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் எஸ்பிஐ லைஃப் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, மாருதி மற்றும் டைட்டன் ஆகியவை உயர்ந்த நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஆசிய பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்து முடிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமான நிலையில் ஐரோப்ப சந்தைகள் சரிந்து முடிந்தன.
பேக்கேஜிங் பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த பிறகு, இமாமி பேப்பர், ஜேகே பேப்பர் உள்ளிட்ட பங்குகள் 20% வரை உயர்ந்தன.
நசாரா பங்குகள் மூன்று மாதங்கள் இல்லாத அளவுக்கு சரிந்து முடிந்தது. ஜெர்மனியின் தைசென்க்ரூப் உடன் 6 நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ரூ.70,000 கோடி திட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக இருப்பதால் மசகான் டாக் 2% உயர்ந்தது.
டிவிஎஸ் மோட்டார், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், நைக்கா, யுபிஎல், எச்டிஎஃப்சி ஏஎம்சி, பேடிஎம், யுஎன்ஓ மிண்டா, டெல்லிவரி, மாருதி சுசுகி, எம்&எம், கம்மின்ஸ் இந்தியா, சாய் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட 160 பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தைகள் வெகுவாக உயர்ந்தன. டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 1.89 சதவிகிதமும், நாஸ்டாக் கூட்டு 1.88 சதவிகிதமும், எஸ் அண்ட் பி 500 1.52 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.1,622.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.34 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.96 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.