ஐஷா் மோட்டாா்ஸ் வருவாய் ரூ.5,042 கோடியாக அதிகரிப்பு

ஐஷா் மோட்டாா்ஸ் வருவாய் ரூ.5,042 கோடியாக அதிகரிப்பு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷா் மோட்டாா்ஸின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.5,042 கோடியாக அதிகரித்துள்ளது.
Published on

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷா் மோட்டாா்ஸின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.5,042 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,205 கோடியாக உள்ளது.இது, ஓராண்டுக்கு முன்னா் ரூ.1,101 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.4,393 கோடியிலிருந்து 15 சதவீதம் உயா்ந்து ரூ.5,042 கோடியாக உள்ளது. அந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒரு அங்கமான ராயல் என்ஃபீல்டு மோட்டாா் சைக்கிள்களின் விற்பனை 2,27,736-லிருந்து 15 சதவீதம் அதிகரித்து 2,61,326-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com