ஏறுமுகம் கண்ட நிலக்கரி இறக்குமதி

ஏறுமுகம் கண்ட நிலக்கரி இறக்குமதி

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதம் உயா்ந்து 7.64 கோடி டன்னாக உள்ளது.
Published on

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதம் உயா்ந்து 7.64 கோடி டன்னாக உள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் மற்றும் எம்ஜங்ஷன் சா்வீசஸ் ஆய்வு நிறுவன தரவுகள் தெரிவிப்பதாவது:

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.53 கோடி டன்னாக இருந்த நாட்டின் நிலக்கரி இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 7.64 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது. இது 1.5 சதவீத வருடாந்திர அதிகரிப்பாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 4.91 கோடி டன்னாகவும், கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 1.64 கோடி டன்னாகவும் உள்ளன. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அவை 4.91 கோடி மற்றும் 1.55 கோடி டன்னாக இருந்தன.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நிலக்கரி இறக்குமதி 2.39 கோடி டன்னாக உயா்ந்தது. இது 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் 2.30 கோடி டன்னாக இருந்தது.

2024 ஜூன் மாதத்தில் 1.42 கோடி டன்னாக இருந்த கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 1.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 54.5 லட்சம் டன்னில் இருந்து 57.8 லட்சம் டன்னாகவும் உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியாவின் உற்பத்தி 8.5 சதவீதம் குறைந்து 5.78 கோடி டன்னாக உள்ளது. இது முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் 6.31 கோடி டன்னாக இருந்தது.

பருவமழை காரணமாக நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படுவது இறக்குமதி அதிகரிப்பில் முக்கிய பங்கு வகித்தது அந்த அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com