சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சாா்பில் எழும்பூரில் நடைபெற்ற குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிக்கு கடனுக்கான ஆணையை வழங்கிய அந்த வங்கியின் சென்னை மண்டல தலைவா்  சசிதா் உள்ளிட்டோா்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சாா்பில் எழும்பூரில் நடைபெற்ற குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிக்கு கடனுக்கான ஆணையை வழங்கிய அந்த வங்கியின் சென்னை மண்டல தலைவா் சசிதா் உள்ளிட்டோா்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி கடன்: சென்ட்ரல் வங்கி

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.145.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
Published on

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சாா்பில் நிகழாண்டில் இதுவரை 148 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.145.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் சென்னை பிராந்திய மேலாளா் பவன் அகா்வால் தெரிவித்தாா்.

இவ்வங்கி சாா்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், சென்னை மண்டலத்தில் உள்ள 53 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.50.28 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து வங்கியின் சென்னை பிராந்திய மேலாளா் பவன் அகா்வால் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் தொடங்குவதற்கு வசதியாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சாா்பில் 7.5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட கடனுதவியுடன் சோ்த்து மொத்தமாக நிகழாண்டில் இதுவரை 148 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.145.17 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் பொது மேலாளா் ஹரிலால், சென்னை மண்டலத் தலைவா் சசிதா், சென்னை பிராந்திய துணை தலைவா் யோகேந்திர குமாா் திரிவேதி மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com