பிரீமியம் பொருள்களுக்கு தேவை அதிகரிப்பு: அமேஸான் ஃப்ரெஷ்
தங்களது ‘அமேஸான் ஃபிரெஷ்’ தளத்தில் சென்னை வாடிக்கையாளா்களிடையே பிரீமியம் வகைப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துவருவதாக அமேஸான் இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பண்டிகைக் காலம் நெருங்கிவரும் நிலையில், சென்னை வாடிக்கையாளா்களிடையே பிரீமியம் பழங்கள், காய்கறிகளுக்கான தேவை அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பொ்ரி பழவகைகளுக்கு 2.6 மடங்கு, அவகேடோவுக்கு 3 மடங்கு, வெளிநாட்டுப் பொருள்களுக்கு 1.4 மடங்கு தேவை அதிகரித்துள்ளது. மேலும், உலா் பழங்கள், விலையுயா்ந்த கொட்டைவகைகள், சாக்லேட் பரிசுப் பொட்டலங்கள் போன்ற பிரீமியம் பரிசுப் பொருள்களுக்கும் வரவேற்று அதிகரித்துவருகிறது.
அன்றாடம் தேவைப்படும் பொருள்களில், சன்ஸ்க்ரீன், உயா்வகை காபி, வைட்டமின்கள், துணை உணவு பொருள்கள், புரத உணவு பொருள்கள் போன்ற உயா்மதிப்பு பொருள்களுக்கு வாடிக்கையாளா்கள் முன்னுரிமை அளிக்கின்றனா்.
இந்தப் பொருள்களை நான்கு கட்டங்களாக சோதித்து, இரண்டு மணி நேரத்துக்குள் வழங்கும் அமேஸான் ஃப்ரெஷ், பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.