இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு

இந்திய பங்குச் சந்தையில் ஜியோ நுழையவிருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
Published on
Updated on
2 min read

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் இந்திய பங்குச் சந்தையில் நுழையவிருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, முதல் முறையாக மக்களுக்கு அதன் நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. வரும் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜியோ பங்குகள் ஐபிஓ செய்யப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சில முன் அனுமதிகள் பெறவேண்டியிருப்பதகாவும் முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார்.

ஒரு நிறுவனம், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவதே ஐபிஓ எனப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனம் தனது பங்குகளை மக்கள் வாங்கும் வகையில் பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, பங்குதாரர்களுக்கு இடையே உரையாற்றினார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

ஜியோவின் ஆண்டு வருவாய் ரூ.1,28,218 கோடியாக (15.0 பில்லியன் டாலர்) உள்ளது. இது 2025ஆம் நிதியாண்டில் 17 சதவீத ஆண்டு வளர்ச்சியாகும்; நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.64,170 கோடி (7.5 பில்லியன் டாலர்) ஆகும். இந்த தரவுகள், ஜியோ நிறுவனம் ஏற்கனவே உருவாக்கியிருக்கும் மகத்தான சாதனைகளுக்கு ஒரு சான்று, மேலும் அது உருவாக்கவிருக்கும் மிகப்பெரிய சாதனைகளையும் இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஜியோ நமது உலகளாவிய போட்டியாளர்களைப் போல, நன் மதிப்பை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை இது நிரூபிப்பதாகவும், இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அம்பானி கூறினார். மேலும், ஜியோ 50 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இன்று, ஜியோ குடும்பம் 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். 50 கோடி வாடிக்கையாளர்கள் என்பது உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடையாளம். இதற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி கூறினார்.

ஜியோ மிகச் சிறந்த எதிர்காலத் திட்டங்களைக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஐந்து உறுதிமொழிகளை அளிக்கிறேன்,

ஜியோ ஒவ்வொரு இந்தியரையும் செல்போன் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பிராட்பேண்ட் சேவை மூலம் இணைக்கும்.

ஒவ்வொரு இந்திய வீடுகளும் ஜியோ ஸ்மார்ட் ஹோம், ஜியோடிவிபிளஸ், ஜியோ டிவி ஓஎஸ் மற்றும் தடையற்ற ஆட்டோமேஷன் போன்ற டிஜிட்டல் சேவைகளால் ஒன்றிணைத்திருக்கும்.

ஜியோ இந்தியாவில் செய்யறிவு புரட்சியை ஏற்படுத்தும், அனைவருக்கும் எல்லா இடங்களிலும் செய்யறிவு என்பதே இலக்கு.

ஜியோ அதன் வணிகத்தை இந்தியாவுக்கு வெளியே விரிவுபடுத்தும், எங்கள் சொந்த தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்லும் என்று அறிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆகாஷ் அம்பானி, ஜியோவில்தான், நான் எனது தொழில் பயணத்தை முதல்முறையாகத் தொடங்கிறேன். ஏராளமான சவால்களை சந்தித்தேன், அனுபவப் பாடங்களைக் கற்றேன், எனது நோக்கத்தை உணர்ந்தேன். ஜியோவுடன் இணைந்தே வளர்ந்தேன், அது தற்போது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது, காரணம், அது என்னுடைய அங்கம். என்னை நம்பி, உங்களது பார்வை மற்றும் உங்களது வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று முகேஷ் அம்பாவின்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Summary

Reliance Industries Limited chairman and businessman Mukesh Ambani has said that Reliance Jio will soon enter the Indian stock market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com