கோப்புப் படம்
கோப்புப் படம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முதன் முறையாக 88ஐ தாண்டி 88.19 ஆக சரிந்து முடிவடைந்தது.
Published on

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முதன் முறையாக 88ஐ தாண்டி 88.19 ஆக சரிந்துள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் 61 காசுகள் சரிவைப் பதிவு செய்தது இந்திய ரூபாய்.

அமெரிக்காவின் அதித வரிகள் காரணமாகவும், தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி ஆகியவற்றால், மாத இறுதியில் டாலரின் தேவை அதிகரித்த நிலையில் ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக அழுத்தத்தில் இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதே வேளையில், உள்நாட்டு பங்குகளில் ஏற்பட்ட எதிர்மறை போக்கு சந்தை உணர்வுகளைப் வெகுவாக பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு எப்போதும் இல்லாத வகையில் குறைந்தபட்சமாக ரூ.88.19 ஐ தொட்ட நிலையில், முடிவில் 61 காசுகள் உயர்ந்து ரூ.88.19ஆக முடிவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.87.58 ஆக நிறைவு.

இதையும் படிக்க: 24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

Summary

The rupee breached the 88-mark for the first time and closed at an all-time low of 88.19 against the US dollar on Friday, registering a sharp decline of 61 paise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com