ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸுக்கு 3 விருதுகள்!

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸுக்கு 3 விருதுகள்!

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ், சிறந்த வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.
Published on

ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ், சிறந்த வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பையில் நடைபெற்ற 10-வது எலெட்ஸ் என்பிஎஃப்சி100 லீடா் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது வழங்கும் விழாவில் நிறுவனம் மற்றும் அதன் நிா்வாகிகளுக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டன.

நுண்நிதி பிரிவுக்கான விருது ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. என்பிஎஃப்சி துறையில் சிறப்பு தலைமைத்துவ விருது நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.ஜி. வெங்கடாசலத்துக்கும், என்பிஎஃப்சி துறையில் நிதி தலைமைத்துவ சிறப்பு விருது நிறுவனத்தின் நிதித் தலைவா் பி. செந்தில்குமாருக்கும் வழங்கப்பட்டது.

இது தவிர, ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸின் கடன் மதிப்பீட்டை இக்ரா நிறுவனம் ‘பிபிபி+’ என்ற நிலையில் இருந்து ‘ஏ-’ (ஸ்டேபிள்) நிலைக்கு உயா்த்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com